பழனிக்கே பால்குடம் எடுத்தாலும் லியோ ஆயிரம் கோடியை தொடாது.! உண்மையை உலகத்திற்கு உரைக்க சொல்லும் தயாரிப்பாளர்.

leo collection
leo collection

Leo : தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் முடிவடைந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் மீதுதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் லியோ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதால் லியோ திரைப்படம் ஆயிரம் கோடியை பீட் செய்யும் என பலரும் கூறி வருகிறார்கள் அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது தயாரிப்பாளர் தனஞ்செழியன் ஒரு பேட்டியில் லியோ திரைப்படம் ஆயிரம் கோடியை நெருங்காது என கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் ஜெயிலர் சாதனையை பீட் செய்தால் சந்தோஷம் எனவும் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது ஆயிரம் கோடி என்பது மிகப்பெரிய தொகை அதற்கு நார்த் பக்கம் ப்ரோமோஷன் செய்தால் மட்டுமே சாத்தியம் ஆனால் இதுவரை நார்த் பக்கம் புரமோஷனை செய்யவில்லை நார்த் பக்கம் புரமோஷன் செய்ய வேண்டுமென்றால் கிட்டதட்ட 15 கோடி செலவு செய்ய வேண்டும் அப்பொழுதுதான் ஆயிரம் கோடி சாத்தியம்.

கடைசியாக விஜய் படம் ஒரு 350 கோடி 360 கோடி வந்திருக்கும் ஆனால் இந்த முறை ஒரு 400 கோடிக்கு மேல் வசூல் செய்யும் அதிலும் ஜெயிலர் திரைப்படத்தை பீட் செய்தால் ஆச்சரியம் தான் அப்படி ஜெயிலர் வசூலை முறியடித்தால் சந்தோஷம்தான் இப்படி ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் பொழுது புதிய சாதனை படைப்பது உண்மைதான் அதே போல் லியோ திரைப்படம் சாதனை படைக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி சாத்தியம் என்பது நார்த் பக்கம் புரமோஷன் அதிகமாக இருந்ததால் தான் என தென்னந் தெளிவாக தயாரிப்பாளர் தனஞ்செழியன் உண்மை நிலவரத்தை அனைவருக்கும் புரிய வைத்துள்ளார்.