கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனா உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிக அளவிற்கு பரவிவுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து இலட்சக்கணக்கானோர் நாள்தோறும் இறந்து வருகிறார்கள்.
அதுவும் முக்கியமாக இந்தியாவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு தான் முதலிடத்தை வகித்து வருகிறது.எனவே பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக அனைவரிடமும் நிவாரண உதவியை கேட்டு வருகிறார்.
அந்த வகையில் தொடர்ந்து பல திரை பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களால் முடிந்த நிவாரண உதவியை வழங்கி வருகிறார்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேவையானவற்றை செய்து வருகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க சினிமாவில் உள்ள ஏராளமான நடிகர்கள் தங்களால் முடிந்த நிவாரண உதவியை வழங்கி உள்ளார்கள். ஆனால் ஒரு சில நடிகைகளை தவிர முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரும் கொரோனா நிவாரண உதவியை அளிக்கவில்லை இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அனைவரையும் ஆச்சரியப்படும் அளவிற்கு பிரபல நிறுவனம் லைகா பெரும் தொகை ஒன்றை அளித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி புரோடக்சன் அல்லிராஜா சுபாஷ்கரன் அவர்களின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சரை நேரில் சந்தித்து ரூபாய் 2 கோடி காசோலையை வழங்கியுள்ளார்.
லைகா நிறுவனத்தின் நிர்வாகிகளான திரு. GKM தமிழ் குமரன்,திரு.நிருதன், திரு.கௌரவ் ஆகியோர் ஒன்றிணைந்து முதலமைச்சரை நேரில் சந்தித்து ரூபாய் 2 கோடியை வழங்கியுள்ளார்கள்.