லெஜன்ட் சரவணனுக்கு 51 வயதுன்னு சொன்னா நம்ப முடிகிறதா.! புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்…

saravanan arul

தொழிலதிபராக வலம் வந்த சரவணா இன்று சினிமாவில் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தின் மூலம் கால் தடம் பதித்தார். முதலில் தன்னுடைய கடை விளம்பரங்களில் நடிகைகளுடன் நடிகர்களை நடிக்க விடாமல் தானே அந்த விளம்பர படங்களில் நடித்து ரசிகர்களிடைய மிகவும் பிரபலம் அடைந்தவர். அதுமட்டுமில்லாமல் பண்டிகை நாட்கள் வந்து விட்டாலே சரவணாவின் அட்டூழியம் தாங்க முடியாது எங்கு திரும்பினாலும் அவரின் நடனம் தான்.

அந்த அளவு தன்னுடைய கடை விளம்பரங்களில் நடித்து பிரபலம் அடைந்தார் மேலும் சரவணா தி லெஜன்ட் என்ற திரைப்படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார் முதன்முறையாக முழு திரைப்படத்தில் நடித்திருந்ததால் கொஞ்சம் குறை இருந்தது தான் ஆனால் அந்த குறையை பலரும் முதன் முதலில் நடித்துள்ளதால் பெரிதாக யாரும் விமர்சனம் செய்யவில்லை.

முதல் முறையே ஓரளவு நன்றாக நடித்து விட்டார் என பலரும் கருத்து தெரிவித்தார்கள். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது வசூலிலும் ஓரளவு வசூலை செய்தது என கூறப்படுகிறது. இந்த நிலையில் லெஜென்ட் சரவணன் அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் லெஜன்ட் சரவணன் ஒவ்வொரு நாளும் தன்னுடைய ரசிகர்களுடன் இணைந்து இருக்கிறார் அவர் இப்போது புகைப்படம் மற்றும் ஏதாவது ஒரு சம்பந்தப்பட்ட விஷயத்தை பதிவு செய்து வருகிறார்.  அந்த வகையில் ரசிகர்களிடம் ஹாப்பி சண்டே என்பதை அறிவிக்கும் வகையில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் அவருக்கு வயது ஆகாதது போல் மிகவும் குறைவான வயதுடன் தோற்றமளிக்கிறார் இதை பார்த்த பலரும் இவ்வளவு இளமையாக லெஜென்ட் சரவணன் இருக்கிறார் என ஆச்சிரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இதோ அவரின் புகைப்படம்.

saravanan
saravanan