பேன்ட்க்கு மேல் புடவை கட்டி கோமாளித்தனமாக போட்டோ ஷூட் நடத்திய பழம்பெரும் நடிகை சீதா.! வைரலாகும் வீடியோ

seetha
seetha

வெள்ளித்திரையில் அறிமுகமாகி பிறகு சின்னத்திரையிலும் ஏராளமான சீரியல்களில் நடித்து வருபவர்தான் நடிகை சீதா. இவர் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவந்த ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் இந்த திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்த நிலையில் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அந்த வகையில் தற்பொழுது வரையிலும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சன் டிவி, மெகா டிவி, சூர்யா டிவி உள்ளிட்ட ஏராளமான முன்னணி தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்துள்ளார். பிறகு நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இந்த ஜோடிக்கு ஆண் குழந்தையும் உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் 11 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்து வந்த சீதா 2001ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார். இந்நிலையில் பிறகு தன்னுடைய 43 வயதில் 2011ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகர் சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்களும் சிறிது காலத்தில் பிறந்து விட்டனர். இந்நிலையில் தொடர்ந்து சீதா திரைப்படங்கள், சீரியல்கள் என நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

seetha 1
seetha 1

அந்த வகையில் சமீபத்தில் டைகர் திரைப்படத்தில் நடிகர் அதர்வாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தனக்கென ஒரு யூடியூப் சேனலை நடத்தி வரும் சீதா தொடர்ந்து ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் 1.5 லட்சம் பாலோசர்களை வைத்துள்ளார் அதில் தன்னுடைய அன்றாட வாழ்க்கை, மாடி தோட்டம், சமையல் குறிப்பு என பல வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

seetha
seetha

அந்த வகையில் தற்பொழுது ‘சீதா எஸ் ராவண அழகி’ என்ற போட்டோ சூட் நடத்தியுள்ளார் அதில் முன்பு போல் இல்லாமல் கொஞ்சம் மாடர்னாக புடவை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.