legend singer spb’s doctor speak about his memories on spb video:பாடகர் எஸ் பி பி அவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் பாடலை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் குறைந்தபட்சம் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடகர் எஸ்பிபி அவர்கள் 52 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி மருத்துவ பலனின்றி காலமானார் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று அதிலிருந்து வெளிவந்த பின்னர் மீண்டும் உடல்நிலை சரி இல்லாமல் போனது.
இப்படி இருக்கும்சூழ்நிலையில் இவருக்கு மருத்துவம் பார்த்த தீபக் என்கிற டாக்டர் அவருடனிருந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது எனது வழக்கமான நேரங்களில் இருந்ததை விட எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த 52 நாட்கள் வித்தியாசமானவை.
எனக்கு மிகவும் பிடித்தமான பாடகர் உடன் இருந்த நேரங்களை மறக்க முடியாது. அவருடன் தினமும் 4 முதல் 5 மணி நேரம் நான் செலவிடுவேன், எனது கல்லூரி காலங்களில் நான் அவர் பாடலைக் கேட்டு வளர்ந்தவன். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் ஸ்பெஷல் பேஷன்ட் போல என்னை நடத்தாதீர்கள் எல்லாரையும் போலவே ட்ரீட் செய்யுங்கள் என கேட்பார்.
அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் இருந்த அனைத்து மருத்துவர்களிடமும் மிகவும் நெருக்கமாக பழகினார் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.