ஏராளமான தொழிலதிபர்கள் நடிப்பின் மீது அதிகமாக ஆர்வமா இருப்பதால் தங்களுடைய செலவின் மூலம் திரைப்படங்களின் நடிக்க வருபவர்கள் சிலர் உள்ளார்கள். அந்த வகையில் ஒருவர் தான் தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் அவர்கள். சரவணா ஸ்டோர் தொழிலதிபர் சரவணன் அவர்கள் தற்பொழுது லெஜண்ட் சரவணன் அவர்கள் ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இலையில் தற்பொழுது தி லெஜண்ட் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள 2500 திரையரங்குகளில் தமிழ்,தெலுங்குz மலையாளம், கன்னட மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளிலும் லீஸ்சாக உள்ளது.
இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.மேலும் மிகப்பெரிய வெற்றியடையும் எனவும் கூறப்படுகிறது. நிலையில் தற்பொழுது பட குழுவினர்கள் தமிழகத்தில் மட்டும் இன்றைய அனைத்து மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சென்று இப்படத்தை ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்று கேரளாவில் நடந்த ப்ரமோஷன் பொழுது செய்தி வாசிப்பாளர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை சரவணன் கூடியுள்ளார். அதாவது அடுத்த படத்திலும் நீங்கள் சூப்பர் ஹீரோவாக நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு கண்டிப்பாக அடுத்த படத்திலும் சூப்பர் ஹீரோவாக நடிப்பேன் என்றும் அதே நேரத்தில் அடுத்த படம் சர்வதேச அளவில் எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
‘தி லெஜண்ட்’திரைப்படத்தினை பான் இந்தியா படமாக வெளியிடும் லெஜெண்ட் சரவணன் அடுத்ததாக பான் வேர்ல்ட் திரைப்படமாக எடுக்க இருப்பதாக கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இவர் நடிப்பில் அடுத்ததாக மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க உள்ள இந்த திரைப்படத்தினை யார் இயக்குவார் என எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளது.