தலை சுற்ற வைக்கும் லெஜெண்ட் சரவணன் சொத்து மதிப்பு.? ஆத்தாடி இத்தனை கோடியா.?

sarava stores saravanan
sarava stores saravanan

Legend Saravanan Net Worth : சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் என்று சொன்ன உடனே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரின் ஆடல் பாடல் தான் ஏனென்றால் தன்னுடைய கடை விளம்பரங்களில் மற்ற நடிகர்களை நடிக்க விடாமல் அவரே நடித்து பிரபலம் அடைந்தவர். அதுமட்டுமில்லாமல் இவரின் கடை விளம்பரம் குழந்தைகளையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டது.

பொதுவாக ஒரு கடை முதலாளி என்றால் விளம்பரங்களில் நடிகர் நடிகைகளை ஆட வைத்து விளம்பரம் செய்வார்கள் ஆனால் சரவண நடிகைகளுடன் தானே விளம்பரத்தில் நடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் அந்த வகையில் ஹன்சிகா, தமன்னா என பல நடிகைகளுடன் நடித்துள்ளார் விளம்பர படங்களில்.

சரவணனுக்கு தற்பொழுது 50 வயது இருக்கும் ஆனால் இன்றும் 20 வயது இளைஞர் போல் மிகவும் இளமையாக சுற்றித் திரிகிறார் இளமையாக இருக்கும் சரவணன் கடந்த வருடம் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை அஜித், விக்ரம் நடிப்பில் உருவாக்கிய உல்லாசம் திரைப்படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜெடி ஜெர்ரி இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதுதான் ஆனாலும் முதலுக்கு மோசம் இல்லாமல் ஓரளவு வசூல் செய்தது என கூறப்படுகிறது இதனை தயாரிப்பாளர் லெஜெண்ட் சரவணன் தெரிவித்தார் அதேபோல் சரவணன் அடுத்த திரைப்படத்திற்கு ரெடியாகிவிட்டார் த லெஜன்ட் திரைப்படம் OTT இணையதளத்தில் வெளியாகி நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் சரவணனின் சொத்து மதிப்பு என்ன என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது அது மட்டும் இல்லாமல் இவரின் சொத்து மதிப்பை தெரிந்து கொண்ட பலர் வாயைப் பிளக்கிறார்கள் சென்னையில் பல அடுக்குமாடி கட்டடத்துடன் இவருக்கு சொந்தமாக துணிக்கடை இருக்கிறது அது மட்டும் இல்லாமல் பல வீடுகளும் இருக்கின்றன சரவணா ஸ்டோர்ஸ் லெஜன்ட் தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலியில் மிகப்பெரிய வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

சரவணனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் அதே போல் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது இவர் வீட்டில் இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்வதாக தகவல் வெளியாகியது அது மட்டும் இல்லாமல் பத்துக்கும் மேற்பட்ட சொகுசு கார்களையும் வைத்துள்ளாராம் இந்த நிலையில் தன்னுடைய நிறுவனங்கள் மூலம் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்று புள்ளி ஐந்து கோடி வரை சம்பாதித்து வருவதாக கூறுகிறார்கள் அதேபோல் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 6 ஆயிரம் கோடி இருக்கும் என கூறப்படுகிறது இந்த தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ஆனால் இது எந்த அளவு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.