பிரபல தொழிலதிபர் சரவணன் அருள் ஆரம்பத்தில் தன்னுடைய கடை விளம்பரத்தில் நடித்து வந்தார் அப்போது அவரை ட்ரோல் செய்து வந்தனர். அதையெல்லாம் கண்டுகொள்ளாத அண்ணாச்சி தி லெஜெண்ட் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் குதித்தார். என்னதான் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவரைக் கேலி கிண்டல்கள் செய்தாலும் இந்த படம் நிகழ்த்திய ஐந்து சாதனைகளைப் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.
அதாவது ரஜினி கமல் போன்ற நடிகர்கள் வயதாகியும் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள். இவர்கள் தனது இளம் வயதில் இருந்து சினிமாவில் இருப்பதால் ரசிகர்கள் அவர்களை ஹீரோவாக தான் இன்று வரையிலும் பார்க்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் 50 வயதில் ஹீரோவாக நடித்த முதல் நபர் நம்ம அண்ணாச்சி தான்.
அதேபோல் எந்த ஒரு நடிகரும் தனது முதல் படத்தில் உலக அழகியுடன் நடித்ததில்லை ஆனால் சரவணன் அருள் தனது முதல் படத்தில் உலக அழகி ஊர்வசி ரவ்டேலாவுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்த இவருக்கு 20 கோடி சம்பளம் கொடுத்ததாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அடுத்ததாக ஒரு புதுமுக நடிகருக்கு தமிழ் சினிமாவில் இதுவரை ஆயிரம் திரையரங்குகள் ஒதுக்கியது இல்லை ஆனால் தொழிலதிபர் சரவணன் அருள் அவர்களின் தி லெஜன்ட் திரைப்படத்திற்காக உலகம் முழுவதும் 2500 க்கு மேற்பட்ட ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 800 திரையரங்கிற்கு மேல் ஒதுக்கப்பட்டிருப்பது இது முதல்முறையாகும்.
மேலும் தி லெஜன்ட் திரைப்படம் வெளியான முதல் நாளில் இரண்டு கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அது மட்டுமல்லாமல் தற்போது வரை 15 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு நம்ம அண்ணாச்சி தன்னுடைய முதல் படத்திலேயே பல சாதனைகள் புரிந்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.