ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாச்சி… இனிதான் சம்பவமே இருக்கு.. மிரட்டப்போகும் லெஜண்ட்

legent-saravanan
legent-saravanan

ஜோடி-ஜெர்ரி இயக்கத்தில் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமான அவர் தான் சரவணா ஸ்டோர்ஸ் புகழ் அண்ணாச்சி. இந்த படம் திரையரங்குகளை தொடர்ந்து டிஸ்னிப் பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகலுக்கு இடையே வெளியானது. சில குறைகள் இருந்தாலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் இவருடைய அடுத்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் எதிர்பார்ப்பு நிறைவேற்றும் வகையில் புதிய படத்தின் அப்டேட்டை லெஜண்ட் சரவணா வெளியிட்டுள்ளார். சரவணா ஸ்டோர்ஸ் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமான இவருக்கு படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. எனவே இதன் காரணமாக சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்த நிலையில் தற்பொழுது ஹீரோவாகவும் அறிமுகமாகி மாஸ் காமித்து வருகிறார்.

அந்த வகையில் அவரே சொந்தமாக தயாரித்து ஹீரோவாக அறிமுகமான படம் தான் தி லெஜெண்ட். இந்த படத்தினை ஜேடி-ஜெர்ரி இயக்கியிருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பான் இந்திய படமாக வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்ற நிலையில் இதற்கு மேல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக லெஜண்ட் சரவணன் பல முயற்சிகளை செய்து வருகிறார்.

இவர் இந்த படத்தினை தொடர்ந்து தற்பொழுது அண்ணாச்சி புதிய படம் ஒன்றில் கமிட்டாக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்பொழுது விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் அண்ணாச்சியும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது எல்லாம் உண்மை கிடையாது என்ன பிறகு தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அண்ணாச்சி நல்ல கதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். எனவே விரைவில் இந்த படத்தின் இயக்குனர், ஹீரோயின்கள் உள்ளிட்ட விபரங்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த படத்தின் புதிய லுக்கில் கெத்தான வீடியோவுடன் அறிமுகமாக இருக்கிறார்.