தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்து பீஸ்ட் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இவர் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தினை வம்சி பைடிப்பில்லி இயக்க ராஷ்மிகா மந்தனா, பிரபு,சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகிய வருகிறது இதன் காரணமாக நாள்தோறும் எவ்வாறு வீடியோ சோசியல் மீடியாவில் கசிந்து வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சடைய வைத்து வருகிறது. மேலும் அந்த வீடியோவில் பிரபு டாக்டராக இருப்பதும் விஜயின் அப்பாவாக நடிக்கும் சரத்குமார் ஸ்ட்ரக்சரில் இருந்த வீடியோவை அங்கிருந்து நபர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இவ்வாறு ஒவ்வொரு வீடியோவாக சோசியல் மீடியாவில் கசிந்து வருவதால் கடைசி நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகுவதற்கு முன்பே அனைவருக்கும் இந்த படத்தின் கதை பெரிய போகின்றது என ரசிகர்கள் மிகவும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். மேலும் இவ்வாறு இந்த வீடியோக்கள் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளார்களாம்.
இதனை முதலில் செய்திருக்க வேண்டும் இப்பொழுது தடை விதித்தால் மட்டும் என்ன எனக் கூறுகிறார்கள் ரசிகர்கள் முன்னதாக சென்னையின் குடியிருப்பு பகுதியில் செட் போட்டு படப்பிடிப்பு நடைபெற்றது அந்த வீடியோவும் வெளியானது செட்டை பிரித்து வேறு இடத்தில் அமைத்தார்கள் இதனால் திட்டமிட்ட படப்பிடிப்பு நடத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்தடுத்து விஜய் தன்னுடைய படங்களில் நடிக்கள்ளார். மேலும் இந்த திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ்சாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடம் கடைசியில் வெளியாகும் என கூறப்படுகிறது.