தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம் இவர் இயக்கத்தில் வெளியாக்கிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன இந்த நிலையில் மணிரத்தினம் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியானது.
இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் சிறப்பாக தங்களது நடிப்பு வெளிப்படுத்தியதால் படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கில் கண்டு மகிழ்ந்தார்கள்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் சுமார் 500 கோடியை தாண்டி வசூல் செய்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தது. பொன்னியின் செல்வன் கதையை புக்கில் படித்தவர்களுக்கு திரையில் காண ஒரு மிக அரிய வாய்ப்பாக மணிரத்தினம் தன்னுடைய விடா முயற்சியால் இந்த திரைப்படத்தை இயக்கினார்.
இந்த நிலையில் முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தையும் முடித்துள்ளார் சமீபத்தில் கூட படத்தின் தயாரிப்பு நிறுவனம் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தில் ஏதாவது காட்சிகள் விடுபட்டிருந்தாலும் அல்லது ஏதாவது காட்சி சுதப்பி இருந்தாலும் அந்த காட்சியை மீண்டும் எடுக்கலாம் என அறிவித்திருந்தது மணிரத்தினத்திற்கு.
இந்த நிலையில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் 28ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தில் இடம்பெறும் குந்தவை திரிஷாவின் சில புகைப்படங்கள் இணையதளத்தில் லீக் ஆகி வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.