விஜய் டிவி தொலைக்காட்சி புதுவிதமான நிகழ்ச்சிகளை கையாண்டு மக்களின் பார்வையைத் திருப்பி வருகிறது அந்த வகையில் பிக்பாஸை தொடர்ந்து மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட சீசன் வெகுவிரைவிலேயே உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர் அவர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்களின் மனதிலும் இடம் பிடித்து தற்போது வெள்ளித்திரை பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகர் அஸ்வின் குமார். ஆள் பார்ப்பதற்கு சிவகார்த்திகேயன் போல் இருப்பதால் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் வெகுவிரைவிலேயே உருவாகத் தொடங்கியது.
தற்போது இவருக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை உணர்ந்த வெள்ளிதிரை பிரபலங்கள் இவருக்கு பட வாய்ப்பை அள்ளிக் கொடுத்துள்ளனர் அந்த வகையில் “என்ன சொல்லப்போகிராய்” என்ற திரைப்படத்தில் இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற மக்களின் மனதை வென்ற காமெடி நடிகரான புகழும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கதாநாயகியாக தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா ஆகிய இரு நடிகைகள் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. படப்பிடிப்பில் இந்த புகைப்படங்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருகிறது தற்போது இணையதளத்தில் கசிந்துள்ளது இதை நீங்களே பாருங்கள்.
படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அஸ்வின் உங்களின் படத்திற்காக நாங்கள் மிகப்பெரிய அளவில் காத்திருக்கிறோம் என கூறி லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.