சினிமா உலகை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் அடுத்த கட்டத்திற்கு செல்ல உடல் எடையை குறைத்து பிட்டாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது ஆனால் இதிலிருந்து மாறுபட்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி காணாமல் செய்துவிடுகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிக உறுதியாக இருந்து கொண்டு தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி அந்த நல்ல பெயரைத் தக்கவைத்துக் கொண்டு வருகிறார் தனுஷ். அதற்கு ஏற்றவாறு தனது உடலமைப்பை மாற்றி கொண்டு நடிப்பை வெளிப்படுத்துவதால் இவருக்கான வரவேற்று தற்போது உச்சத்தில் இருக்கின்றது.
தமிழில் இவர் கடைசியாக நடித்த கர்ணன், ஜெகமே தந்திரம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் அடுத்ததாக இவர் இந்தியில் ஒரு படம் பண்ணுகிறார் தமிழில் கார்த்திக் நரேனுடன் இணைந்து மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜவஹர் மித்ரன் இளம் இயக்குனருடன் முதல் முறையாக கைகோர்த்து திருச்சிற்றம்பலம் என்னும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர், ராசிகன்னா மற்றும் நித்யா மேனன் போன்றவர்கள் நாயகியாக நடிக்கின்றனர். இப்படத்தின் சில காட்சி புகைப்படம் கூட வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்பொழுது தனுஷ் பிரபல நடன இயக்குனர் ஒருவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் அது தற்போது இணைய தள பக்கத்தில் கசிந்துள்ளது.
அதாவது இந்த படத்தில் நடன இயக்குனராக ஜனி மாஸ்டர் இணைந்துள்ளார் அவருடன் நடிகர் தனுஷ் வேற மாதிரியான ஒரு லுக்கில் நின்று செம ஸ்டைலாக புகைப்படம் எடுத்துக்கொண்டார் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.