சமீபத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இவர்களின் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது எனவே தளபதி விஜயின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் தளபதி ரசிகர்களுக்கு இன்னும் உற்சாகத்தை தரும் வகையில் தற்போது தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் இப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இந்த பூஜையில் தளபதி விஜய், இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்கவுள்ளார். இவர்களைத் தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மற்றொரு நடிகையாக டிக் டாக் பிரபலம் அபர்ணா தாஸ். காமெடி நடிகரான யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள்.
சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் கோபுரம் பிலிமில் போட்டுள்ள செட்டில் படத்தின் ஒரு பாடலுக்கான காட்சி எடுக்க முடிவெடுத்து உள்ளார்கள். இந்நிலையில் சமூகவலைதளத்தில் சூர்யா, விஜய் திரைப்படங்களில் வில்லனாக நடித்த வித்யுத் ஜெய்ம்ல் நடிக்க உள்ளார் என்று ரசிகர்கள் கூறி வந்தார்கள்.
இதனை பார்த்த வித்யூத் ஜமால் நான் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவில்லை. அப்படி நடித்தால் மிகவும் மகிழ்ச்சி என்று ட்வீட் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது வரையிலும் யார் வில்லனாக நடிக்கிறார் என்ற விஷயம் மிகவும் சஸ்பென்ஸாக இருந்து வருகிறது.