கொரோனா காரணத்தினால் முன்பு திரையரங்குகள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தது எனவே பல படங்கள் ஓடிடி வழியாக வெளியே வந்தது. பிறகு சில மாதங்கள் கழித்து பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் 50% பார்வையாளர்களுடன் ரிலீஸ் ஆனது.
எனவே வெளியே எங்கும் போகாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியாக ஆர்வத்துடன் இப்படத்தை பார்த்து வந்தார்கள். அந்த வகையில் உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதோடு இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் வில்லனாக புதிய அவதாரம் எடுத்ததால் இவரின் கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த வகையில் தற்போழுது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் மாசாண செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் தெறி, பிகில், மெர்சல் போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அட்லி மீண்டும் விஜயுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்தவகையில் தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆர் மற்றும் விஜய் இவர்கள் இருவரயும் இணைந்து அட்லி ஒரு சிறப்பான திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளாராம். ஆனால் தற்போது அட்லி பல கோடி பட்ஜெட்டில் ஷாருக்கானை வைத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இரண்டு வருடத்திற்கு தமிழ் சினிமா பக்கமே தலைகாட்ட மாட்டார் என்று தகவல் வெளிவந்தது.
ஆனால் தற்பொழுது ஜூனியர் என்டிஆர் மற்றும் விஜய் இவர்களை வைத்து அட்லி இயக்க உள்ளார் என்ற தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.