தற்பொழுது உள்ள தொலை காட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு தரமான கதை உள்ள பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்தவகையில் தற்போது மிகவும் ஃபேமஸான தொலைக்காட்சிகள் என்று பார்த்தால் சன் டிவி,ஜீ தமிழ், விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் இந்த நான்கு தொலைக்காட்சிகளிலும் ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது சன் டிவியில் பூவே உனக்காக,விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர், ஜீ தமிழில் செம்பருத்தி, கலர்ஸ் தமிழில் இதயத்தை திருடாதே இந்த நான்கு சீரியலும் டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நான்கு சீரியலிலும் நடிக்கும் ஹீரோயின்களான ஷபானா, சுஜிதா, ராதிகா ப்ரீத்தி, பிந்து ஆகிய நான்கு முன்னணி நடிகைகளும் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.
இதுவரையிலும் இன்த மாதிரி 4 தொலைக் காட்சிகளிலும் உள்ள முன்னணி நடிகைகள் எந்த விளம்பரத்தையும் நடித்தது இல்லை. தற்பொழுது புதிதாக இப்படி நடித்துள்ளதால் எந்த விளம்பரமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் இவர்கள் நடித்து இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.