பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது இவ்வாறு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பிரபலமாவதற்கு ஒரு முக்கிய பங்கு வகிப்பவர்கள் தான் தொகுப்பாளர்கள் இந்த தொகுப்பாளர்களின் பேச்சு மற்றும் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம்.
அந்தவகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் பல்வேறு தொகுப்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் பாவனா.
இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி சமீபத்தில் என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகி விட்டு தற்போது ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் இவ்வாறு பாவனா சென்றதன் காரணமாக பல்வேறு ரசிகர்களும் மனவருத்தத்தில் உள்ளார்கள்.
ஆனால் சமீபத்தில் நடந்த பல்வேறு முக்கிய ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகள் அனைத்தையும் பாவனா தான் தொகுத்து வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தொகுப்பாளினி பாவனா விஜய் டிவி பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியது என்னவென்றால் விஜய் டிவி பக்கம் இனி நான் போக வேண்டாம் என்று நினைக்கிறேன் ஏனெனில் அவங்க ஸ்டைலிலும் என்னுடைய ஸ்டைலும் வேறு ஆகிவிட்டது ஏனெனில் அவர்கள் தற்பொழுது காமெடி நிகழ்ச்சிகளை மட்டுமே போக்கஸ் செய்து வருகிறார்கள்.
ஆனால் அது எனக்கு சுத்தமா வரவே மாட்டேங்குது இதற்கெல்லாம் நான் என்ன செய்ய முடியும் என்று அவர் கூறியது மட்டுமில்லாமல் தற்போது தொகுப்பாளினி பாவனா ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.