தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அல்லு அர்ஜுன் வித்தியாசமான கதைகளில் நடிக்க ரொம்ப ஆசையாக இருந்தார். அந்த ஆசையை இயக்குனர் சுகுமார் ஒருவழியாக தீர்த்து வைத்தார் என்றுதான் கூறவேண்டும்.
கிராமத்து பின்னணியில் செம்மர கடத்தலை மையமாக வைத்து ஒரு சூப்பர் படத்தை கொடுத்திருந்தார் அந்த படமே புஷ்பா இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது இதுவரை புஷ்பா திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவருகின்றன.
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சமந்தா, பகத் பாசில் போன்ற டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். புஷ்பா திரைப்படம் தெலுங்கு சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று அசத்தி வருகிறது இந்த திரைப் படத்திற்கான மவுசு இப்போது வரையிலும் குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவிற்கு படம் சிறப்பாக இருக்கிறதால் மக்கள் திரையரங்கை நாடி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் புஷ்பா திரைப்படத்தை சுமார் 30 கோடி கொடுத்து அமேசான் OTT நிறுவனம் ஒருவழியாக வாங்கி உள்ளது ஆம் இன்று இரவு 8 மணிக்கு அமேசான் பிரைம் தளத்தில் புஷ்பா திரைப்படம் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த நிலையில் புஷ்பா திரைப்படம் அமேசான் தளத்தில் 30 கோடிக்கு பெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து டிவி உரிமை மட்டும் சுமார் 50 கோடிக்கு விற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. புஷ்பா படம் வசூல் வேட்டை நடத்திய நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இதன் மூலமும் நல்ல வாகவே காசு பார்த்து உள்ளதாம்.