தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோக்கள் தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுக்க சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு நடித்து வருகின்றனர். ஆனால் ஒரு சில வில்லன் கதை நடிகர்களுக்கு பிடித்துப் போகவே ஹீரோக்கள் கூட வில்லனாக நடிக்கும் நிலைமைக்கு மாறிவிடுகின்றனர் அந்த வகையில் விஜய் சேதுபதி முதலிடத்தில் இருக்கிறார்.
ஹீரோவாக ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் அவர் வில்லனாக பட்டையை கிளப்புவதால் அவரது மார்க்கெட் அசுர வளர்ச்சியில் இருக்கிறது. இவரைப் போலவே சினிமா உலகில் இருக்கும் ஒரு சில நடிகர்கள் சில காரணங்களால் வில்லன் ரோலில் நடித்து அசத்தி உள்ளனர். அந்த நடிகர்கள் யார் யார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
1. நரேன் : ஹீரோவாக சித்திரம் பேசுதடி போன்ற பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நரேன் இவர் விஷ்ணு இயக்கத்தில் உருவான முகமூடி படத்தில் வில்லனாக நடித்தார். ஆனால் வில்லனாக வெற்றி வரவில்லை. 2. :வினய் : உன்னாலே உன்னாலே, காதல் கொண்டான் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்த வினய். அண்மை காலமாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் துப்பறிவாளன், எதற்கும் துணிந்தவன், டாக்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார்.
3. பிரசன்னா : பை ஸ்டார் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த பிரசன்னாவுக்கு ஹீரோவாக நடிப்பதை விட குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரங்கள் அவருக்கு சூப்பராக சூட்டாகின அந்த வகையில் வில்லனாக அஞ்சாதே, திருட்டுப்பயலே 2, மாபியா போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
4. பார்த்திபன் : 80 காலகட்டங்களில் இருந்து சினிமா உலகில் நடித்து வருபவர் நடிகர் பார்த்திபன் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்த இவர் வில்லனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார் பார்த்திபன் வில்லனாக நானும் ரவுடி தான், அயோக்கியா, குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
5. அர்ஜுன் : தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்தவர் அர்ஜுன் இவர் வில்லனாக ஒரு சில படங்களில் மிரட்டி உள்ளார் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான கடல், விஷாலின் இரும்புத்திரை திரைப்படத்தில் வில்லனாக நடித்தார்.
6. அரவிந்த்சாமி : ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தளபதி அந்த படத்தில் கலெக்டராக நடித்து அறிமுகமானவர் அரவிந்த்சாமி அதன்பின் ரோஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமா உலகில் காணாமல் போனார் திரும்ப கம்பேக் விதமாக ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து அறிமுகமானார். அதன் பிறகு போகன் மற்றும் பல்வேறு திரைப்படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி வருகிறார்.
7. எஸ்.ஜே சூர்யா : இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி பின் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றவர் எஸ்.ஜே சூர்யா ஆனால் இது இரண்டும் அவருக்கு பெரிய அளவு கை கொடுக்காத காரணத்தினால் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் எஸ். ஜே. சூர்யா மாநாடு, மெர்சல், ஸ்பைடர் போன்ற படங்களில் வில்லனாக மிரட்டி வந்தார் தற்போதும் ஹீரோ வில்லன் என பல்வேறு படங்களில் நடிக்கிறார். இவர்களைப் போன்று தமிழ் சினிமாவில் அருண் விஜய், விஜய், சேதுபதி, அஜித், சிபிராஜ், விக்ராந்த், விஜய், ஜெயம் ரவி போன்ற பிரபலங்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி உள்ளனர்.