சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169 திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனக்கே உரிய பாணியில் இந்த திரைப்படத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் இதற்க்கு முன்பாக கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி படம் என்பதால் திறமையான நடிகர், நடிகைகளை இழுத்துப் போட படக்குழு முனைப்பு காட்டி வருகிறது. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக உலக அழகியும் முன்னணி நடிகையான ஐஸ்வர்யாராய் மீண்டும் ஒருமுறை ரஜினியுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது மீண்டும் இணைய உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
அதுவும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகனாக நடிக்க உள்ளார் என தகவல்கள் உலா வருகிறது. மேலும் இந்த படத்தில் வளர்ந்து வரும் நடிகையான பிரியங்கா அருள்மோகன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இவர் இதுவரை சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோருடன் கைகோர்த்து நடித்த நிலையில் வெகு விரைவிலேயே சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பணியாற்ற உள்ளதால் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறாராம். மொத்தத்தில் தலைவரின் 169 வது திரைப்படம் ஒரு செம படமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை..