அண்மை காலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் அடிக்கின்றன அந்த வகையில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய கே ஜி எஃப் படம். ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் சிறு இடைவெளிக்கு பிறகு அதன் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டது.
பல்வேறு தடைகளை தகர்த்தெரிந்து ஒருவழியாக ஏப்ரல் 14 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆனது இந்த படத்தில் மாஸ் சீன்கள், சென்டிமென்ட், ஆக்சன் போன்ற காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததால் இந்த படம் ரசிகர்களையும் தாண்டி அனைவரையும் கவர்ந்துள்ளது படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதனால் நாளுக்கு நாள் திரையரங்கில் இந்த திரைப்படத்தை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இதனால் வசூல் வேட்டையும் அதிகரித்து உள்ளது சொல்லப்போனால் கிட்டத்தட்ட 900 கோடி வரை வசூல் செய்துள்ளது இன்னும் ஓரிரு நாட்களிலேயே KGF 2 திரைப்படம் ஆயிரம் கோடியை தொட்டு ஒரு புதிய சாதனை படைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் கடைசியில் மூன்றாவது பாகம் உருவாகும் என சொல்லி முடித்தது. மேலும் நடிகர் யாஷ் கேஜிஎப் 3 திரைப்படம் நிச்சயம் உருவாகும் அதை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் எடுக்க இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறினார்.
இப்படி இருக்கின்ற நிலையில் தற்பொழுது ஒரு சூப்பர் செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதாவது KGF 3 படத்தில் நடிகர் பிரபாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. இப்பொழுது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.