நடிகர் சிம்புவுக்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படம் ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளித் தந்தது இந்த படத்தை தொடர்ந்து சிம்புவின் மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்து சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இந்த படமும் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது சிம்பு கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்த கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் மற்றும் வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து பத்து தல படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அண்மையில் வெளியாகியது.
அதன்படி பத்துதல படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்திற்கு போட்டியாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் விடுதலை படமும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, கௌதம் மேனன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் மார்ச் 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனால் சிம்புவுக்கு போட்டியாக காமெடி நடிகர் சூரியை வெற்றிமாறன் இறக்கிவிட உள்ளார். இதனால் கண்டிப்பாக விடுதலை படத்தை விட சிம்புவின் பத்து தல படம் வெற்றி பெற வேண்டும் என்ற நிபந்தனையில் இருக்கிறார் சிம்பு.