தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார் கே எஸ் ரவிகுமார். ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனராக பணியாற்றிய பல சிறந்த நடிகர்களை வளர்த்துக் கொண்டுள்ளார் அந்த வகையில் ரஜினி, சரத்குமார், கமல், அஜித் என பல டாப் நடிகர்களை வளர்த்து விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஎஸ் ரவிக்குமார் சரத்குமார் நடித்த நாட்டாமை என்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். ரஜினியை வைத்து பாட்ஷா, படையப்பா ஆகிய படங்களை கே எஸ் ரவிகுமார் தான் கொடுத்தார் அஜித்தை வைத்து வரலாறு, வில்லன் போன்ற படங்களை கொடுத்தார். இப்படி ஓடி கொண்டிருந்த இவர் கடந்த 8 ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது காரணம் ரஜினி நம்பியே கடந்த 8 வருடங்களாக காத்துக்கொண்டிருக்கிறார். ரஜினியை வைத்து கடைசியாக கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய திரைப்படம் தான் லிங்கா.
இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் அள்ளவில்லை இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிக்காக ஒரு சூப்பர் கதையை உருவாக்கி அவரிடம் சொல்லி உள்ளார் அவரும் கதை நன்றாக இருக்கு பார்ப்போம் என சொல்ல.. ஆனால் ரஜினியோ அடுத்தடுத்த படங்களில் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் கேஎஸ் ரவிக்குமாருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
கிட்டத்தட்ட 8 வருடங்களாக ரஜினி நம்பியே நிற்கிறார் ஆனால் வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஒரு சிறந்த இயக்குனர் சிறந்த படைப்பை கொடுப்பார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் ரஜினியோ கேஎஸ் ரவிக்குமாருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வருகிறார்.
ஒரு சிறந்த இயக்குனர் படத்தை மிஸ் செய்து வருவதாக ரசிகர்களும் புலம்பி வருகின்றனர் சொல்லப்போனால் அஜித்தைப் பார்த்து ரஜினி இந்த விஷயத்தில் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறுகின்றனர் ஒரு இயக்குனரை வைத்து படம் பண்ணி அது தோற்றுப் போனால் அஜித் அடுத்தடுத்த வாய்ப்பு கொடுப்பார் அந்த வகையில் சிறுத்தை சிவா, வினோத் ஆகியவர்களக்கு அடுத்தடுத்த வாய்ப்பைக் கொடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.