“லியோ” படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கிய முன்னணி நிறுவனம்.? இத்தனை கோடியா.. தலை சுத்திப்போன ரசிகர்கள்

vijay
vijay

தளபதி விஜய்  சமீப காலமாக   இளம் இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்.  அந்த வகையில் அட்லி, நெல்சன் ஆகியோர்களை தொடர்ந்து லோகேஷ் உடனும் தொடர்ந்து கூட்டணி அமைத்து படம் பண்ணி வருகிறார் ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் படம்  நல்ல விமர்சனத்தை பெற்று  அதிரி புதிரி ஹீட்..

அடித்த நிலையில் இரண்டாவது முறையாக இணைந்து லியோ திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றனர். லியோ படத்தின் இரண்டு கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில்   மூன்றாவது மற்றும் அடுத்தடுத்த  சூட்டிங் சென்னை மற்றும் வெளிநாடுகளில் எடுக்கப்பட இருக்கிறதாம். லியோ படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், திரிஷா, பிக் பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கப்பட இருப்பதாக ஏற்கனவே லியோ பட குழு அறிவித்துள்ளது.

விஷயத்தை கேள்வி ஏற்பட்ட ரசிகர்கள் பலரும் ஷூட்டிங் பார்க்க ரெடியாக இருக்கின்றனராம் எங்கே எப்பொழுது என்று தெரிந்தால் போதும் ரசிகர்கள் கூட்டமாக படையெடுப்பது உறுதி  இப்படி இருக்கின்ற நிலையில் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ப்ரீ பிசினஸ் மூலம் பல கோடிகளை அள்ளி வருகிறது.

அதன்படி லியோ படத்தின் வெளியீட்டு உரிமைகள் 60 கோடிக்கு பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் முற்றிலும் வாங்கியுள்ளது. விஜய் கடைசியாக நடித்த  வாரிசு படம்  32 கோடி விற்கப்பட்ட நிலையில் தற்போது அதைவிட இரண்டு மடங்கு லியோ படம் விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது சினிமா பிரபலங்களுக்கு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.