பீஸ்ட் படத்தை முதல்நாள் முதல் ஷோ பார்த்த முன்னணி நடிகைகள்.! அதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா..

beast-
beast-

தளபதி விஜய் அண்மை காலமாக மாஸ்  திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பிகில், மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து தளபதி விஜய் இளம் இயக்குனரான நெல்சன் உடன் முதல் முறையாக கைகோர்த்து பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

இது தளபதி விஜய்க்கு 65வது திரைப்படமாகும். படம் ஏப்ரல் 13ம் தேதி உலக அளவில்  வெளியானது. படம் வெளிவருவதற்கு முன்பாகவே ரசிகர்கள் முன்பதிவில் மாஸ் காட்டினர் ஆனால் படத்தை பார்க்கும் போது தான் தெரிகிறது இந்த படமும் லாஜிக் மீறல் காமெடி ஒர்க்கவுட் ஆகவில்லை படம் மொத்தத்தில் எதிர்மறையான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.

பீஸ்ட் திரைப்படம் தமிழில் தாண்டி மற்ற மொழிகளிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது இருப்பினும் படத்தின் பட்ஜெட்டையும் தாண்டி இந்த திரைப்படம் வசூலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியே பிரபல நடிகைகள் வந்து பார்த்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சொல்லப்போனால் படக்குழு தான் படத்தின் ரெஸ்பான்ஸ் எப்படி ரசிகர்கள் மத்தியில் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முதல் நாள் முதல் காட்சிக்கு வருவார்கள் ஆனால் பீஸ்ட் படத்தில் நடிக்காத நடிகைகள் கூட படத்தை திரையரங்கில் பார்த்துள்ளனர் முதல் நாள் முதல் காட்சியை கீர்த்திசுரேஷ் பார்த்து அசத்தி உள்ளார் அவரை தொடர்ந்து பிரியங்கா அருள் மோகனும் படத்தை பார்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பார்க்க ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது விஜய்யின் அடுத்தப் படத்திற்கு கொக்கி போட தான் இந்த வேலையை செய்கின்றனர் என நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர் ஆனால் விஜயின் 66 வது திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் ஒருவேளை விஜய்யின் 67 வது திரைப்படத்தில் நடிக்க இப்பொழுது ஐஸ் வைக்கின்றார்கள் என நெட்டிசன்கள் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.