பொதுவாக என்னதான் ஒரு பணியை செய்து வந்தாலும் சரி பலருக்கும் சொந்தமாக தொழில் செய்வதற்கு அதிக அளவிற்கு ஆர்வம் இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் நடிகைகள் மட்டும் எம்மாத்திரம்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருக்கும் முன்னணி நடிகைகள் பலரும் சொந்த தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் அப்படி சொந்த தொழில் செய்து வரும் பிரபல நடிகைகள் செய்யும் தொழில்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடி வருகிறார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் நடிகை நயன்தாரா லிப் பாம் என்ற கம்பெனி ஒன்றை தொடங்கியுள்ளார் அதுமட்டுமில்லாமல் சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
நடிகை சமந்தா இவர் சாக்கி என்ற பெயரில் ஆன்லைனில் ஜவுளி விளம்பரம் செய்து வருகிறார் இதில் பெண்கள் சம்பந்தப்பட்ட மிக பிரமாண்டமான உடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நடிகை ஹன்சிகா இவர் பலூன் ஸ்டைலிஸ்ட் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார் அந்தவகையில் பணங்களை வைத்து டிசைன் செய்யும் வேலை ஆகும். அதேபோல நடிகை தமன்னா ஒயிட் அண்ட் கோல்ட் என்ற பெயரில் நகைகளை டிசைன் செய்து வருகிறார்.
நடிகை காஜல்அகர்வால் மும்பையில் செயற்கை நகைகள் செய்யும் கம்பெனி ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்.