கர்ப்பமான பின்பு திருமணம் செய்து கொண்ட முன்னணி நடிகைகள்.

amy-jackon
amy-jackon

Leading actresses married after pregnancy:திருமணத்துக்கு முன்பே லிவிங் டுகெதர் வாழ்வது, குழந்தை பெற்றுக் கொள்வது என வெளிநாட்டவரின் கலாச்சாரங்களை பின்பற்றும் சினிமா பிரபலங்கள். அந்தவகையில் சில முன்னணி நடிகைகளின் லிஸ்ட் இதோ.

ஸ்ரீதேவி. இவர் 1996 ஆம் ஆண்டு போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் ஆன பின்பு ஆறு ஆண்டுகள் கழித்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். 14 வருடங்களுக்குப் பின்னர் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற திரைப்படத்தில் மீண்டும் நடித்தார். இவருக்கு திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பிறந்தது. பின்பு இவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாக அவரே கூறினார்.

சரிகா – இவர் 1988 ஆம் ஆண்டு தான் கமல்ஹாசனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதற்கு முன்பே இவரும்  கமலஹாசனும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தார்கள். அதன் காரணமாக திருமணத்திற்கு முன்பே சுருதிஹாசன் பிறந்துவிட்டார். அதற்குப்பின் திருமணம் செய்துகொண்டு இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் பிறந்தார்.

எமி ஜாக்சன் – இவர் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து நம்பர்-1 நாயகியாக தமிழ் திரையுலகில் வலம் வந்தார். மேலும் இவருக்கென தமிழில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. இவர் கர்ப்பமான பிறகு தான் தன் காதலரை நிச்சயம் செய்து கொண்டார். பிறகு குழந்தை பெற்றுக் கொண்டார்.

மேலும் இதுபோன்ற லிவிங் டுகெதர் கலாச்சாரத்தை தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் பின்பற்றி வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே.