Tamil Actress: ஏராளமான நடிகைகள் தற்பொழுது சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்து வந்தாலும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் அந்த மாதிரியான கேரக்டர்களில் நடித்தவர்களும் இருக்கிறார்கள் அப்படி கோலிவுட்டில் விபச்சாரியாக நடித்த நடிகைகள் லிஸ்டை பார்க்கலாம்.
சினிமாவிற்கு அறிமுகமான குறுகிய காலகட்டத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி சினிமாவில் தனக்கான ஒரு அந்தஸ்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்கவும் வேண்டாம் அப்படி நல்ல கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென வில்லங்கமான கேரக்டர்களில் சில நடிகைகள் நடித்துள்ளனர்.
அனுஷ்கா: தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்கா அழகினாலும், திறமையினாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் தற்போது வரையிலும் சில படங்களில் நடித்து வருகிறார். சமீப காலங்களாக இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை என்றாலும் ஒரு காலகட்டத்தில் நிற்கக் கூட நேரமில்லாத அளவிற்கு நடித்து வந்தார் இந்த சமயத்தில் வானம் படத்தில் விபச்சாரியாக நடித்திருந்தார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சங்கீதா: பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் எந்த கேரக்டர் கிடைத்தாலும் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார் சங்கீதா. அப்படி பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை பெற்று தந்தது. இந்நிலையில் தான் சங்கீதா தனம் என்ற படத்தில் விபச்சாரியாக நடித்து கவர்ச்சியையும் தூக்காக காண்பித்தார்.
அஞ்சலி: தமிழ் மட்டுமல்லாமல் ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து கலக்கி வரும் அஞ்சலி தமிழில் கற்றது, தமிழ் எங்கேயும் எப்போதும் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் மலையாளத்தில் ரோசாப்பூ என்ற படத்தில் விபச்சாரியாக நடித்திருந்தது பேசும் பொருளாக அமைந்தது.
சினேகா: பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்து வந்தாலும் இவரும் புதுப்பேட்டை படத்தில் விபச்சாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்வாறு புதுப்பேட்டை படத்தில் சினேகா நடித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்தாலும் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.