கமலின் நடனத்தை பார்த்து பயந்து ஓடிய முன்னணி நடிகை.? சமாதானப்படுத்தி நடிக்க வைத்த கலா மாஸ்டர் – யார் அது தெரியுமா..

kamal-and-kala-

தமிழ் சினிமா உலகில் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு கெட்டப்புகளை போட்டு நடித்து தனக்கென ஒரு பிரம்மாண்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் கடந்த நான்கு வருடங்களாக சினிமா பக்கமே நடிக்காமல் இருந்து வந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கமலுக்கு விக்ரம் படத்தின் கதையை சொல்ல..

அது அவருக்கு ரொம்ப பிடித்துப் போகவே அந்த படத்தை தயாரித்து நடிக்கவும் செய்தார் படம் ஒருவழியாக ஜூன் மூன்றாம் தேதி வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தற்போது வரை தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது 25 நாட்கள் கடந்து விக்ரம் திரைப்படம் திரையில் ஓடுகிறது.

தற்போது வரை உலக அளவில்  சுமார் 400 கோடிக்கு மேல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் நல்லதொரு வசூலை அள்ளி 500 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கமல் குறித்து ஒரு சூப்பரான தகவல் கிடைத்துள்ளது.

அதாவது பிரபல நடிகை ரேவதி கமலுடன் நடனமாட பயந்து உள்ளார் அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம். 1986 ஆம் ஆண்டு கமலஹாசன் ரேவதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் புன்னகை மன்னன் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு கமலுடன்  சேர்ந்து நடனமாட கலா மாஸ்டர் சொல்லி உள்ளார்.

revadhi
revadhi

ஆனால் அவரோ கமல் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான் உடன் சேர்ந்து நடனமாட தனக்கு பயமாக இருப்பதாக கூறியுள்ளார் எப்படியோ அவருக்கு அறிவுரை கூறி கலா மாஸ்டர் அவரை நடிக்க வைத்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.