ஹீரோயின், அக்கா, அம்மா என அணைத்து கதாபத்திரத்திலும் ரஜினியுடன் நடித்த ஒரே நடிகை இவர் தான்!!

rajini-villan-tamil360newz
rajini-villan-tamil360newz

தமிழ் சினிமாவில் 80, 90களில் இருந்து இப்போது வரை முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவருடன் இணைந்து நடிகை ஸ்ரீவித்யா பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் அப்போதிலிருந்து இப்போது வரை ஹீரோவாகவே நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், போன்றோர் இன்னும் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீவித்யா பின்னர் அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் அவருடனே நடித்தார்.

அதாவது நடிகைக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க மார்க்கெட் குறைய ஆரம்பிக்கும் உடனே அவர்களே இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா தளபதி திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

அது போல உழைப்பாளி திரைப்படத்தில் ரஜினிக்கு அக்காவாக நடித்திருந்தார். அப்படி ஒரு நடிகை அணைத்து கதாபாத்திரமாகவும் ரஜினியுடன் நடித்துள்ளார் என்றால் அது ஸ்ரீவித்யா தான்.

sridivya-1
srividhya