கவர்ச்சியாக ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு காமெடியில் கலக்கிய தமிழ் நடிகைகள்.!! இவங்கள தான் இளசுகளுக்கு ரொம்ப பிடிக்குமாம்.

shakila1

பாபிலோனா: இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் பொதுவாக கவர்ச்சி நடிகையாக தான் பல படங்களில் நடித்துள்ளார்.இதனை தொடர்ந்து தமிழில் அசத்தல் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து தை பொறந்தாச்சு,வட்டாரம், என்னம்மா கண்ணு உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார். இவர் அனைத்து படங்களிலும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் காமெடி நடிகையாக தான் பிரபலம் அடைந்துள்ளார்.

babilona
babilona

விசித்திரா:மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,தமிழ் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை விசித்ரா.இவர் கவர்ச்சியிலும் காமெடி காட்டி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இவர் தமிழ் சினிமாவிற்கு போர்க்கொடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார். இவர் வீரா, முத்து போன்ற இன்னும் பல படங்களில் காமெடி நடிகையாக நடித்துள்ளார்.

vicithira

ஷகிலா : இவர் டீச்சராக நடித்து அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார். இவர் தமிழ், மலையாளம் இரண்டிலும் கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஜெயம்,சிவ மனசுல சக்தி மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற பல படங்களில் காமெடி நடிகையாக நடித்துள்ளார்.தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் காமெடி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபேற்று வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் பல வருடங்களுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

sakila

மும்தாஜ்: இவர் மோனிசா என்ற மோனோலிசா என்ற திரைப்படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ்,ஹிந்தி,மலையாளம், தெலுங்கு என ஏராளமான மொழித் திரைப்படங்களில் மாற்றி மாற்றி கவர்ச்சி நடித்து வந்தார்.இவர் நடித்த படங்களில் ஏ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.அப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருப்பார். இவர் சில வருடங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

sakila

ஷர்மிலி : நடிகை சர்மிலி தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக சினிமா உலகில் வலம் வந்தார். பிறகு குணசித்திர நடிகையாக நடிப்பதற்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் அன்பே அன்பே என்ற திரைப்படத்தின் மூலம்  காமெடி நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்றிருந்த கிச்சு கிச்சு தாம்பலம் விளையாடலாமா எனக் கேட்கும் காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.

sharmili

புவனேஸ்வரி : தற்பொழுது இவர் சின்னத்திரையில் பாசமலர்,சந்திரலேகா,சொர்க்கம் மற்றும் சித்தி போன்ற பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் வெள்ளித்திரைக்கு பாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக ஒரு காட்சியில் நடித்திருப்பார். பிறகு காமெடி நடிகையாக நடித்து வந்தார்.அதன் பிறகு தான் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் தற்பொழுது சீரியல்களில் தன் காவனத்தை செலுத்தி வருகிறார்.

bhvaaneshwari