விஜயின் புதிய படத்தில் அம்மாவாக நடிக்க இருக்கும் முன்னணி நடிகை.! வைரலாகும் தகவல்..

vijay 66 latest
vijay 66 latest

தமிழ் நாட்டில் பெரும்பான்மையான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ள நடிகர்களுள் ஒருவர் தளபதி விஜய், இவர் நடிப்பில் தற்போது வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் நிறைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும்,இனி வரும் படம் கண்டிப்பாக பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தப் படம்தான் “தளபதி 61” இந்த படம் தளபதி விஜயின் 61 வது படமாக அமைவதால் இந்த படத்திற்கு தளபதி 61 என்று பெயர் சூட்டியுள்ளனர் இந்த படம் வம்சி இயக்கத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முதன்மையான கதாபாத்திரங்களாக பிரகாஷ்ராஜ் சரத்குமார் பிரபு பிரபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

மேலும் இந்த படத்தில் தளபதி விஜயுடன் முதல் முதலில் சேர்ந்து நடிக்கப் போவது சென்சேஷனல் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆவார். நடிகை ராஷ்மிகா மந்தனா இவருடைய அருமையான நடிப்புனாலும் அழகினாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
இப்படத்தில் ராஷ்மிகா நடிக்கப் போவது என்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. இப்படி எல்லாம் இருக்க இந்த படத்தில் யார் விஜய்க்கு அம்மாவாக நடிக்க போகிறார் என்று பலராலும் கேட்கப்பட்ட பொதுவான கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக ஜெயசுதா நடிக்கப்போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயசுதா வம்சி இயக்கத்தில் வெளிவந்த கார்த்தி மற்றும் நாகார்ஜுனா நடித்த “தோழா” என்னும் திரைப்படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 61 படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்யும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது மேலும் படக்குழுவும் அவ்வாறு செயல்பட உள்ளது.