ஐயோ சாமி எனக்கு விஜய் படமே வேணாம் என கும்பிடு போட்டு ஓட்டம் பிடித்த பிரபல நடிகை.!

vijay
vijay

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். தற்பொழுது எல்லாம் விஜயுடன் நடிக்கும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் பெரிதாக கிடைப்பதில்லை.

அந்தவகையில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த நடிகை ஒருவர் இனிமேல் என் வாழ்நாளில் விஜயுடன் சேர்ந்து எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இருவருக்குமே சொல்லும் அளவிற்கு முக்கியத்துவம் தரவில்லை.

நடிகை மாளவிகா மோகனான் ஓரளவிற்கு ரசிகர்களை கவர்ந்தார். ஆண்ட்ரியா ஏன் கிளைமேக்ஸில் மட்டும் வந்து சண்டை போட்டார் என்று இன்று வரையிலும் புரியாத புதிராகவே ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

தற்பொழுது விஜய் படத்தில் நடிக்கும் நடிகைகளை பாடலுக்காகவும்,காதல் காட்சிகளுக்கும் மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே கடுப்பான ஆண்ட்ரியா இனிமேல் விஜய் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று தனது நெருங்கிய வட்டாரங்ளிடம்  கூறியுள்ளார்.

அதோடு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் நடிக்கும் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்று தயாரிப்பாளர்களு கூறியுள்ளார்.