நடிகை காஜல் அகர்வால் ஆள் பார்ப்பதற்கு தக்காளி பழம் போல கொழுக் மொழுக்கென்று இருந்ததால் இவருக்கு ஆரம்பத்திலேயே வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அதில் தனது திறமையை எவ்வளவு அழகாக காட்டினாரோ அதே அளவிற்கு சற்று கிளாமரையும் ஆரம்பத்திலேயே காட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
ஒரு கட்டத்தில் டாப் நடிகர்கள் மட்டுமே நடிக்கும் வளர்ப்பிற்கு காஜல் அகர்வால் உயர்ந்தார் அதனால் தென்னிந்திய சினிமா உலகில் இருக்கும் நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திய தற்போது தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக உருவானார்.
இப்படி ஓடிக்கொண்டிருந்த நடிகை காஜல் அகர்வால் தனது நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான கிட்சலுவை திருமணம் செய்து கொண்டார் அதன் பின் சினிமா உலகில் அவ்வப்போது தலை காட்டி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென கர்ப்பம் மாறியதால் கமீட்டான படங்களில் இருந்தது பின்வாங்கினார்.
முதலில் குழந்தையை நன்றாக பெற்றெடுக்க வேண்டும் அதன்பின் சினிமாவை பார்த்து கொள்ளலாம் என முடிவெடுத்தார். இதனால் வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்து வந்த நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் போதும் சரி மாடர்ன் டிரஸ்ஸில் தனது அழகை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலானது.
இப்படி இருந்த நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்து உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது நடிகை காஜல் அகர்வாலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் நடிகை காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.