leading actress joined with actor surya in new movie: வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தற்போது இவர் நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்நிலையில் சூரியா அடுத்தடுத்த படங்களில் நடிக்கலாம் என முடிவெடுத்து நடித்து வருகிறார். அந்தநிலையில் இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா என்ற வெப்சீரிஸில் நடித்து வருகிறார்.
அதேசமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.
இதனை அடுத்து மூன்றாவதாக பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளர் சூர்யா. அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு அவருக்கேற்ற ஜோடி கிடைக்காத நிலையில் தற்போது சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த தகவல் என்னவென்றால் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
ராஷ்மிகா மந்தனா இவரது தம்பியான கார்த்திக் நடித்து முடித்துள்ள சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்பொழுது பாண்டிராஜ் புதிய படத்தில் நடிக்க உள்ளார் ராஷ்மிகா மந்தனா இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் அண்ணனுக்கு தம்பி உதவி செய்கிறார் போல என்று கூறி வருகிறார்கள்.