தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தற்பொழுது தல அஜித்தின் 61ஆவது திரைப்படத்தைப் பற்றிய சில அப்டேட்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அஜித்துடன் இணைந்து ஏற்கனவே நான்கு திரைப்படங்களில் நடித்த பிரபல முன்னணி நடிகை தற்போது மீண்டும் அஜித்துடன் இணைந்து ஐந்தாவது முறையாக அஜித்தின் 61ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.
தல அஜித்தின் நடிப்பில் கடைசியாக 2009ஆம் ஆண்டில் விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இப்படம் ரிலீஸ்சாகி ஒரு வருடம் முடிந்த நிலையில் இன்னும் அஜித் நடிப்பில் எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் தல அஜித்தின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
ஆனால் தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.இப்படத்தைப் பற்றிய அப்டேட்கள் எதுவும் வெளிவராததால் ரசிகர்கள் பிரதமர் மோடி போன்ற பலரிடம் வலிமை அப்டேட் கொடுங்கள் என்று போராடி வருகிறார்கள்.
வலிமையில் படத்தில் அப்படி இப்படி கிடைத்த தகவலின் படி அதில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும், ஹீரோயினியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷியும் நடித்து வருகிறார்கள் என்று மட்டும்தான் தெரிகிறது.
இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் ஸ்பெயின் நாட்டில் நடக்க உள்ளதாம். எனவே விரைவில் இப்படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தல அஜித் தற்போது தனது 61வது படத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படத்தில் ஏகன்,பில்லா, ஆரம்பம், விசுவாசம் போன்ற படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ஐந்தாவது முறையாக நடிகர் அஜித்துடன் இணைந்து திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.