ஒரு மாணவனால் எந்த ஒரு இடத்திலும் இருந்து கல்வியை கற்றுக் கொள்ள முடியும் ஆனால் பள்ளிக்கு சென்றால் தான் ஒழுக்கம் மரியாதை போன்ற விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும் என்பதற்காகவே குழந்தைகள் மற்றும் மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த சில வருடங்களாக வைரஸ் தொற்று காரணமாக மக்கள் இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்கு செல்ல முடியாமல் ஆன்லைன் மூலமாக கல்வி கற்கத் தொடங்கினார்கள். ஆனால் சமீபத்தில் பள்ளி திறந்தவுடன் மாணவர்கள் ஆசிரியரை அவமரியாதையாக பேசுவது அடிக்க கை ஓங்குவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக பள்ளி குழந்தைகள் பலரும் மிக ஆர்வமாக பார்ப்பது சினிமா படங்களை மட்டும்தான் அதுமட்டுமில்லாமல் அந்த சினிமாவில் என்ன செய்கிறார்களோ அதை தானும் செய்ய ஆசைப்படுவது மட்டுமில்லாமல் அவர்களைப்போல தங்களையும் மாற்றிக்கொள்கிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் மது அருந்துவது போல காட்சிகள் இடம் பெற்றிருப்பது மட்டுமில்லாமல் ஆசிரியர்களை கிண்டல் செய்யும் வகையில் வாத்தி கம்மிங் என்ற ஒரு பாடல் உருவானது இந்த பாடல் தற்போது பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியரை கிண்டல் செய்வதற்கு உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
அதேபோல நடிகர் தனுஷ் வாத்தி என்ற படத்தில் நடித்திருந்தார் பொதுவாக தமிழில் ஆசிரியர்களை வாத்தியார் என்று அழைப்பது உண்டு ஆனால் அதனை தனுஷ் இந்த திரைப்படத்தில் வாதி என்று சுருக்கமாக கூறியது மாணவர்களின் எண்ணத்தை மாற்றியது மட்டுமில்லாமல் அவர்களின் மனதிலும் இந்த வார்த்தை ஆழமாக பதிந்து விட்டது.
அதேபோல நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் ஆசிரியர்களை எப்படி டார்ச்சர் செய்வது என்பதற்கு இணங்க அவர் செய்யும் சேட்டைகள் என்று பள்ளி மாணவர்களும் தங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்களை துணிச்சலாக டார்ச்சர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
இவ்வாறு பெரிய பெரிய நடிகர்களே நமது சமுதாய அக்கறை இல்லாமல் இப்படி நடந்து கொள்வது மாணவர்களின் என்னத்தை மாற்றுவது போல இருப்பது மட்டுமில்லாமல் அவர்களுக்கு துணிச்சலையும் கொடுக்க வழிவகுத்து வருகிறது.