கிட்ட கூட நெருங்க முடியாத ரஜினியின் சாதனை.! ஆடிப்போன திரையுலகம்

rajinikanth
rajinikanth

Actor Rajinikanth: தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் தன்னுடைய திரை வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்திருக்கும் நிலையில் தற்போது வரையிலும் இவருடைய சாதனைகளை எந்த ஒரு முன்னணி நடிகராலும் முறியடிக்க முடியவில்லை அது குறித்து பார்க்கலாம்.

பொதுவாக ரஜினி நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அப்படி கடைசியாக கடந்த வருடம் வெளியான தர்பார், அண்ணாத்த போன்ற திரைப்படங்கள் சுமாரான வரவேற்பினை பெற்றிருந்த நிலையில் இதனையடுத்து தற்போது வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் பெற்றுள்ளது.

தற்பொழுது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ரஜினி நடிப்பில் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு வருடத்திற்கு குறைந்தது மூன்றில் இருந்து ஐந்து திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம்.

அப்படி 1978ஆம் ஆண்டு வரிசையாக ஏராளமான திரைப்படங்கள் வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த வகையில் பைரவி, இளமை ஊஞ்சலோடு, முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்கள் தமிழ், தெலுங்கு ,கன்னடம் என பழமொழிகளிலும் வெளியானது. ரஜினி நடிப்பில் ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 21 திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்று சாதனை படைத்தது.

மேலும் அதில் ஹீரோவாகவும், வில்லனாகவும் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இன்று வரையிலும் இந்த சாதனையை எந்த முன்னணி நடிகராலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த ஒரு சாதனையே ரஜினி சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு முக்கிய காரணமாக வைத்துக் கொள்ளலாம் அப்படி தற்பொழுதுள்ள அனைத்து முன்னணி நடிகர்களும் வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது வரையிலும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைப்பதில் தவறுவதில்லை. அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர் படம் 500 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.