அஜித்தின் வெற்றி பார்முலாவை பின்பற்றும் முன்னணி நடிகர்கள் – லிஸ்டில் இருக்கும் தளபதி விஜய்.!

ajith-and-vijay
ajith-and-vijay

நடிகர் அஜித்குமார் அண்மைக்காலமாக ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த வகையில் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது.

அஜித்தின் AK 61 தீபாவளிக்கு வரப்போவதில்லை படம் தள்ளிப் போய் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது இது இப்படி இருக்க அண்மை காலமாக அஜித் நடிக்கும் படங்களுக்கு பெரும்பாலும் V சம்பந்தப்பட்ட டைட்டிலே வந்துள்ளது. வீரம், விசுவாசம், விவேகம் கடைசியாக அஜித் நடித்த படம் கூட வலிமை என பெயர் வைக்கப்பட்டது

இப்படி தொடர்ந்து வி சம்பந்தப்பட்ட பெயர்களை வைக்கின்றனர். அஜித்தின் 61-வது திரைப்படத்திற்கும் V சம்பந்தப்பட்ட  பெயரை தான் வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறார்களாம். அஜித் தான் வி சமந்தப்பட்ட பெயரை வைக்கிறார் என்று பார்த்தால்..

அண்மை காலமாக டாப் ஹீரோக்கள் தொடங்கிய இளம் நடிகர்கள் வரை பலரும் V சம்மந்தப்பட்ட டைட்டிலேயே வைத்துள்ளனர். அந்த வகையில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து V சம்பந்தப்பட்ட பெயரான விக்ரம் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இப்பொழுது விஜயின் வாரிசு, சிம்புவின் வெந்து தணிந்தது காடு, கார்த்தியின் விருமன், சூர்யாவின் வணங்கான், தனுஷின் வாத்தி என அனைத்து ஹீரோகளின் படங்களும் V சம்பந்தப்பட்ட படங்களாகவே இருந்து வந்துள்ளனர்.  இந்த விஷயத்தில் அனைத்து நடிகர்களும் நடிகர் அஜித்குமாரை பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக விஜய்யே இந்த விஷயத்தில் அஜித்தை தான் பின்பற்றுகிறாராம்.