leading actors movie which flap: தமிழ் திரையுலகில் திரையரங்கு உரிமையாளர்கள் பெரிய இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மேலும் முன்னணி நடிகைகள் நடிக்கும் திரைப்படத்திற்கும் முக்கியத்துவம் உண்டு.
மேலும் முன்னனி நடிகர்- நடிகைகளின் திரைப்படம் என்றால் கதை இருக்கிறதோ இல்லையோ அவர்களின் பேருக்காகவே திரையரங்கு உரிமையாளர்கள் போட்டிப்போட்டு படங்களை திரையிடுவதற்கு முன்வருவார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே.
அப்படி முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை திரையரங்குகளில் ரிலீஸ் செய்த பின்பு அந்த படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனதால் படம் தயாரித்தவர்கள் நஷ்டம் அடைகின்றனர்.
மேலும் இதனைத்தொடர்ந்து அறிமுக இயக்குனர்கள், அறிமுக நடிகர்கள் இவர்களின் திரைப்படங்களின் கதை நல்லதாக இருந்தால் கூட அந்த திரைப்படங்களை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது பற்றி எந்த ஒரு திரையரங்கு உரிமையாளர்களும் முன்வருவதில்லை.
மேலும் இதுபோல பல பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் தோல்வி அடைந்துள்ளது. அந்த திரைபடங்களின் லிஸ்ட் இதோ.
1.ரஜினிகாந்த் – லிங்கா, குசேலன். 2.கமலஹாசன் – விஸ்வரூபம் 2, உத்தமா வில்லன், தூங்காவனம். 3.அஜித் – விவேகம், பில்லா 2. 4.விஜய்- புலி, சுறா, குருவி. 5.சூர்யா – தானா சேர்ந்த கூட்டம், என் ஜி கே, காப்பான், சிங்கம்3. 6.விக்ரம்- சாமி 2, ராஜபாட்டை, பத்து என்றதுக்குள்ள, துருவ நட்சத்திரம், 7.சிவகார்த்திகேயன்- மிஸ்டர் லோக்கல், ஹீரோ, சீமராஜா.