சினிமாவில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை 40 வயதிற்கு மேல் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாத சில நடிகர்கள் உள்ளார்கள். பொதுவாக நடிகைகள் தான் திருமணம் ஆனால் அழகு குறைந்து விடுமோ என்ற எண்ணத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால் நடிகர்களும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள்.
தற்பொழுது எந்தெந்த நடிகர்கள் 40 வயதிற்கு மேலாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற லிஸ்டை தற்போது காண்போம்.
எஸ் ஜே சூர்யா : இவர் தமிழ் சினிமாவில் திரைப்பட இயக்குனர்,நடிகர்,வில்லன், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என்ற பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக வெற்றியை கண்டார். தற்பொழுது இவருக்கு 52 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
பிரேம்ஜி : மக்கள் மத்தியில் காமெடி நடிகராக பிரபலமடைந்தவர் நடிகர் பிரேம்ஜி. இவர் வெங்கட்பிரபுவின் தம்பி என்பது நாம் அறிந்த ஒன்று தான். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கம் அனைத்து படங்களிலும் தனது தம்பியை நடிக்க வைத்து விடுவார். இதன் மூலம்தான் காமெடி நடிகராக பிரேம்ஜி பிரபலமடைந்தார். முதலில் பிரேம்ஜி பாடகராக அறிமுகமாகி பின்பு தான் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் பிரேம்ஜிக்கு 41 வயதாகி விட்ட நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
சல்மான் கான் : ஹிந்தி திரையுலகில் அசைக்கமுடியாத நம்பிக்கை நாயகன் தான் நடிகர் சல்மான் கான். இவர் நடிப்பில் ரிலீசாகும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான் இவருக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. எனவே இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக சாதனையை படத்தை விடவும். இந்நிலையில் தற்பொழுது சல்மான் கானுக்கு 55 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்குலாக வாழ்ந்து வருகிறார்.
பிரபாஸ்: இவர் பாலிவுட்,கோலிவுட் இந்த இரண்டிலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டது இன்று வரையிலும் அதைப் பற்றிய தெளிவான தகவல் தெரியவில்லை. இந்நிலையில் பிரபாஸுக்கு 41வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
முகேஷ் கண்ணா : இவர் சின்னத்திரையில் வெளிவந்த சக்தியமான் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். தற்பொழுது முகேஷ் கருணாவிற்கு 62 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை.