இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களை எடுத்து வெற்றி கண்டு வருகிறார் முதலில் மாநகரம் அதன்பின் கார்த்தியை வைத்து கைதி விஜய்யை வைத்து மாஸ்டர் இப்பொழுது உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் என்ற படத்தையும் எடுத்து உள்ளார் இந்த படமும் முழுக்க முழுக்க..
ஒரு ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்துள்ளது படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் ரிலீஸாக இருக்கிறது இந்த படம் கமலின் சினிமா கேரியரில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என பலரும் சொல்லி வருகின்றனர். விக்ரம் திரை படத்தில் கமலுக்கு நிகராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர்.
குறிப்பாக விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா போன்றோர் நடித்துள்ளனர். திரைப்படம் உலக அளவில் 5000 திரையரங்குகளிலும் தமிழகத்தில் குறிப்பாக 1000 திரையரங்குகளிலும் படம் ரிலீஸ் ஆக உள்ளதால் மிகப் பெரிய ஒரு தொகையை அள்ளும் என கூறப்படுகிறது. விக்ரம் படத்தை ரொம்ப சிரமப்பட்டு லோகேஷ் எடுத்துள்ளார்.
இந்த படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் சுமார் 8 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். அண்மையில் லோகேஷ் கனகராஜ் தெலுங்கு ஹீரோ பிரபாஸை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார்.
முழுவதையும் கேட்டுவிட்டு பின்பு பிரபாஸ் வழக்கமான கதையாக இருக்கிறது ஒரு பிரமாண்டமான கதையை எடுத்து வாருங்கள் என கூறி அனுப்பியுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் சமூக வலைதளப் பக்கங்களில் இந்த செய்தி தற்போது பரவி வருகிறது.