தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் இதுவரையிலும் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் தற்போதும் தமிழ் சினிமா உலகில் நடித்து வருகிறார் இவருடன் நடிக்க பல நடிகர் நடிகைகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்படி இவருடன் ஒரு சில பிரபலங்கள் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த தோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்பினை கைப்பற்றி சினிமா துறையில் அவர்களும் வளர்ந்துள்ளன மேலும் பலர் இவருடன் நடிக்க ஏங்கிக்கொண்டே இருக்கின்றன ஆனால் நடிகர் ஒருவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக ரஜினி பட வாய்ப்பை தவற விட்டுள்ளார் அது பற்றி தற்போது பார்ப்போம்.
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் படையப்பா.இத்திரைப்படத்தில் இவருடன் இணைந்து சௌந்தர்யா,ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன், சிவாஜி, ரமேஷ் கண்ணா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர் இவர்களுடன் மேலும் இணைந்து நடித்தவர் தான் அப்பாஸ் இத்திரைப்படத்தில் ரஜினியின் மகளை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் நடிகர் விஜய் தான் நடிக்க இருந்தார் ஆனால் சரியான கால்ஷீட் கிடைக்காததால் இப்படத்தை நழுவவிட்டு உள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் ரஜினி படத்தில் விஜய் நடித்திருந்தால் சிறப்புக்குரிய ஒரு படமாக இருந்திருக்கும் எனவும் கூறிவருகின்றனர் இருப்பினும் படம் நழுவியது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.