கமலஹாசனுக்கு வில்லனாக களம் இறங்கிய முன்னணி நடிகர். யார் என்று தெரியுமா.?

vijay-sethupathi-and-kamal
vijay-sethupathi-and-kamal

தற்பொழுது ரசிகர்களை கவரும் வகையில் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார்.  இவர் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விடுகிறது.

அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்திக்கை வைத்து கைது மற்றும் விஜய்யை வைத்து மாஸ்டர் என்று முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வருகிறார்.

பொதுவாக இவர் இயக்கும் அனைத்து திரைப்படங்களுமே பல கோடி பட்ஜெட்டில் தான் உருவாகிறது. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் தான் கதாநாயகராக நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முன்பே தொடங்கும் என்று கூறப்பட்டது  ஆனால் சட்டமன்ற தேர்தல் என்பதால் கமலஹாசன் மிகவும் பிஸியாக இருந்து வந்தார்.எனவே தற்போது தான் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி தெலுங்கில் உப்பண்ணா திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

இவர் வில்லனாக நடித்த இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டான தான் விக்ரம் திரைப்படத்திலும் இவரையே வில்லனாக நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்களாம்.  அந்த வகையில் விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் தொகுப்பாளர் ஒருவர் விக்ரம் திரைப்படத்தை பற்றி கேட்கும்போது அதற்கு வில்லனா அத்திரைப்படத்தில் என்னை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறி உள்ளார்.ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கவில்லை என்று இவர் கூறுவதிலிருந்து தெரிய படுகிறது.