தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்க வருபவர் தளபதி விஜய். பொதுவாக விஜய் நடிக்கும் திரைப்படங்களில் இளம் நடிகர், நடிகைகள் நடிக்க விரும்புவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க இருந்த ஒரு நடிகர் நடிக்க முடியாமல் போனதால் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. விஜயுடன் சேர்ந்து விஜய் சேதுபதியும் நடித்திருந்ததால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வந்தார்கள்.
அந்த வகையில் இத்திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. இத்திரைப்படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகளும் நடித்திருந்தார்கள். அந்த வகையில் இந்த திரைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ்சிற்கு பதிலாக முதலில் வேறு நடிகர் தான் இருந்தாராம்.
அந்த கதாபாத்திரத்தில் ஆண்டனி வர்கீஸ் தான் முதலில் நடிக்க இருந்துள்ளார். ஆனால் கால்ஷீட் பிரச்சினை ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போனதால் எனவே தற்போது லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் விக்ரம் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
எனவே ஆண்டனி வர்கீஸ் ரசிகர்கள் நீங்கள் மாஸ்டர் திரைப்படத்தில் எப்படியாவது நடித்திருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.இவரும் அர்ஜுன் தாஸ் அளவிற்கு நடித்திருப்பார்.