தமிழ் திரையுலகில் எடுத்த உடனேயே டாப் நடிகர்களுக்கு சிறப்பான கதையை சொல்லி படத்தை ஓகே செய்து தற்போது பெற்றி கொண்டு வருபவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் வெற்றியை பெற்றன. அதன் காரணமாக இவரது படத்தில் நடிக்க பல நடிகர்களும் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தற்போது சூர்யாவுடன் ஒரு படம் பண்ண இருக்கிறார். மேலும் விக்ரமின் சியான் 60 திரைப்படத்தையும் இவர் எடுக்க ரெடியாக இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினிக்கும் ஒரு கதையை கூறி ஓகே சொல்லி வைத்திருந்தாராம்.
ரஜினி உடன் ஏற்கனவே பேட்ட திரைப்படத்தின் பணியாற்றினார். படம் வெளிவந்து வெற்றி பெற்றது . அதன் பிறகு தொடர்ந்து பிறகு கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்தே ஜகமே தந்திரம் என்ற படத்தை எடுத்து இருந்தார். படத்தின் டீசர் வெளிவந்து மிகப்பெரிய வைரல் ஆன நிலையில் அதை தொடர்ந்து “என்ன மட்டும் லவ் பண்ணு புஜ்ஜி” பாடலும் வேற லெவல் ஹிட்டடித்தது.
இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஓங்கி இருந்தது. ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்தால் மிகப்பெரிய கிடைக்கும் என தனுஷ் கணக்குப் போட்டிருந்தார் ஆனால் அதற்குள் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பான சசிகாந்த் இந்த திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டார்.
இதற்கு மறுப்பு ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார் தனுஷ். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தனுஷின் ஜகமே தந்திரம் படத்தை போட்டு காண்பித்துள்ளனர் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்னது.
படம் மிரட்டலாக இருப்பதாகவும் கண்டிப்பாக இந்த படம்தனுஷ்க்கு ஒரு புதிய வரலாற்றை ஏற்படுத்தும் எனவும் கூறினார் மேலும் கேங்க்ஸ்டர் படங்களில் ஒரு வித்யாசமான திரைப்படம் எனவும் கூறி கார்த்திக் சுப்பு ராஜாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்