இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கான ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துள்ளார் இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் விஜய் வைத்து பீஸ்ட் ஆகிய வெற்றி படங்களை கொடுத்து அசத்தியுள்ளார்.
தற்போது தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோ வாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார் இது ரஜினிkkuw 169 வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்த்து ஐஸ்வர்யாராய், ரம்யாகிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயன், சிவராஜ்குமார் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்க இருக்கிறது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ரஜினி ஜெயிலர் திரைபடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவில்லை.
ரஜினிக்கு ஜோடியாக பாகுபலி பட நடிகையை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது அவர் பாகுபலி, பாகுபலி 2 கதாபாத்திரத்தில் சிவகாமியாக நடித்த ரம்யாகிருஷ்ணன் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பார் என கூறப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன் இதுவரை சரத்குமார், கமல் போன்ற ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி உடன் ஜோடி சேர உள்ளார்.
அண்மைகாலமாக ரம்யா கிருஷ்ணன் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது ரஜினி உடன் ஹீரோயினாக நடிக்க உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து உள்ளது மேலும் இவர்கள் அனைவரும் இணைந்து நடித்த திரைப்படம் இதுவரை வெற்றி படங்களாக இருந்து வந்துள்ளன. அந்த வகையில் ரஜினியின் 169 வது படமான ஜெயிலர் படம் வெற்றிப் படமாக இருக்கும் என தெரியவருகிறது.