இரண்டு வருடங்களாக விஜய்க்காக 3 கதையை தயார் செய்துகொண்டு காத்திருக்கும் முன்னணி இயக்குனர்.! தலை அசைப்பாரா தளபதி…

vijay latest
vijay latest

தளபதி விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் beast திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது 5 மொழிகளில் வெளியாகிய இந்த திரைப்படம் ரசிகர்களிடம்  கலவையான விமர்சனங்களை சந்தித்தது. மேலும் இந்த திரைப்படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருப்பதாகவும் பலரும் குற்றம் சாட்டி வந்தார்கள்.

மேலும் இந்த திரைப்படத்துடன் போட்டியாக வெளியாகிய திரைப்படம் கேஜிஎப் இரண்டாவது பாகம் இந்த திரைப்படம் ஆரம்பத்தில் 250 திரையரங்குகளில் தமிழ்நாட்டில் ஒளிபரப்பப்பட்டது அதன் பிறகு போகப்போக 360 திரையரங்குகள் வரை கேஜிஎஃப் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது அந்த அளவு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை கூறி வருகிறார்கள் அதிலும் ஒரு சில தரப்பினர் தளபதி விஜய் ஆக்சன்  திரைப்படங்களில் மட்டும் நடிக்கலாம் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் விஜயை வைத்து சிவகாசி, திருப்பாச்சி  ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் விஜய்க்காக கதை எழுதிக் கொண்டு இரண்டு வருடங்களாக காத்திருப்பதாகவும் இரண்டு வருடங்களாக விஜய் பின் தொடர்வதாகவும் கூறி வருகிறார்.

கதை எழுதிக் கொண்டு நான் ரெடி அவர் தன்னை கூப்பிட வேண்டும் தனக்கு இடைவெளி விழுந்து விட்டது என்றும் அவரது மார்க்கெட் வேற லெவல் அதேபோல் பட்ஜெட் வேற லெவல் இதையெல்லாம் தாண்டி பேரரசுக்கு திறமை இருக்கிறது என்று அவர் நம்பி கூப்பிட்டால் நான் ரெடி என தெரிவித்துள்ளார்.

இவர் இவ்வாறு கூறியது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஏனென்றால் சிவகாசி, திருப்பாச்சி திரைப்படங்கள் மாபெரும் ஹிட்டடித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதேபோல் ஆக்ஷன் திரைப்படங்கள் இயக்குவார் எனபலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.