தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக பார்க்கப்படுபவர் நடிகர் விஷால். ஆரம்பத்தில் சண்டக்கோழி, மலைக்கோட்டை, செல்லமே, திமிரு என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் அண்மைக்காலமாக இவர் நடிக்கும் படங்கள் பெருமளவு வெற்றியை ருசிக்க வில்லை.
இதனால் நடிகர் விஷாலின் மார்க்கெட் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது. இதிலிருந்து தன்னை மாற்றிக்கொள்ள விஷாலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். விஷால் கையில் தற்பொழுது மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் டு ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில்..
நேற்று வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான லத்தி திரைப்படம் கோலாகலமாக திரையரங்குகளில் வெளிவந்து வெற்றி நடை கண்டு வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. குறிப்பாக கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் 100 பேருக்கு மேலான ரவுடிகளை விஷால் தனி ஒருவனாக அடித்து நொறுக்கும் சீன்கள் மிரள வைத்துள்ளன.
லத்தி படத்தில் விஷாலுடன் இணைந்து சுனைனா, மிஷா கோஷல், பிரபு, முனீஸ் காந்த் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் முதல் நாளில் விஷாலின் லத்தி திரைப்படம் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி பார்கையில் முதல் நாளில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த பொழுதிலும் வசூல் ரீதியாக இரண்டு கோடிக்கு குறைவாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது இருப்பினும் வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..