அலுங்காம குலுங்காம என் கணவரை அழகா காட்டிட்டிங்க..! படக் குழுவிற்கு பரிசை வாரி வழங்கிய லதா ரஜினிகாந்த்…

rajinikanth
rajinikanth

Latha Rajinikanth: ரஜினிகாந்த் பொதுவாக தான் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் கருப்பாக இருந்தாலும் தனக்கான ஸ்டைலில் ரசிகர்களைப் கவர்ந்தவர்.

அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் ஆர் சுந்தராஜன் இயக்கத்தில் வெளியான படம் தான் ராஜாதி ராஜா. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த மலையாள கரையோரம் என்ற பாடலில் ரஜினிகாந்த் மிகவும் அழகாக இருந்ததாக லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அதாவது ரஜினி நடிப்பில் வெளியான ஒரு படத்தில் இடம்பெற்றிருந்த பாடலை பார்த்து மனைவி லதா ரஜினிகாந்த் என் கணவரை மிகவும் அழகாக காமித்து உள்ளீர்கள் என பட குழுவினர்களுக்கு பரிசையும் கொடுத்துள்ளார் அது குறித்த தகவலை பார்க்கலாம்.

1989ஆம் ஆண்டு ஆர் சுந்தராஜன் இயக்கத்தில் வெளியான ராஜாதி ராஜா படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்தை இளையராஜாவின் சகோதரர் ஆர்டி பாஸ்கர் தயாரிக்க இளையராஜா இசையமைத்திருந்தார்.

ரஜினிகாந்த் தற்பொழுது இரண்டு வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வந்தாலும் ஆனால் அந்த காலகட்டத்தில் ஒரு வருடத்திற்கு ஐந்து படங்களிலாவது நடித்து விடுவார் அப்படி இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுவது வழக்கம்.

இவ்வாறு 80 காலகட்டத்தில் நிற்கக்கூட நேரம் இல்லாமல் ரஜினி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நிலையில் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆர் சுந்தராஜன் இயக்கிய அம்மன் கோவில் கிழக்காலே என்ற படத்தில் நடிக்க இருந்தது ரஜினிதான். ஆனால் சில பிரச்சனைகளால் ரஜினியால் நடிக்க முடியாமல் போக இதனை அடுத்து விஜயகாந்த் அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் நடித்திருந்தார்.

ஆர் சுந்தராஜனின் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என ரஜினி நினைக்க அதன் பிறகு ராஜாதி ராஜா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. இந்நிலையில் இப்படத்தில் மலையாள கரையோரம் என்ற பாடலில் ரஜினி மிகவும் அழகாக இருந்ததாக லதா கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் தனது கணவரை அழகாக காட்டிய பட குழுவினருக்கு பரிசளித்துள்ளார் அதே சமயத்தில் ஸ்டைலாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.